ஒரு மாபெரும் சக்தி எங்கும் வியாபித்து, சர்வ வல்லமையாய், ஒன்று பலவாகி, பலவும் ஒன்றாகி, எங்கும் எல்லாவற்றிலும் ஊடுருவி, உள்ளும், வெளியும், கால-இடைவெளிகளையும் தாண்டி, இந்தப் பூமியிலும், பிரபஞ்ச அண்டத்திலும் பரவியுள்ளது. புல் பூண்டிலிருந்து.... மனித இனம் வரை, ஓரறிவு படைத்த இனங்களிலிருந்து.... ஆறறிவு படைத்த இனம் வரை அவைகளின் அறிவாற்றல், இவைகள் அனைத்தின் பிரபஞ்சத்தில் தோற்றத்தின் மூலம் – அந்த தெய்வீக சக்தியேயன்றி மனிதனின் முயற்சியல்ல.....!!
மேற்படியாக்கம், தொடர்காரணி, கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், சுற்றுதல், விரும்பியவைகளை நிறைவேற்றுதல், வேண்டாதவற்றை அழித்தல், நிலையற்றதிலிருந்து நிலையானதாகவும், நிலையானதிலிருந்து நிலையற்றதாகவும், சுயமாக மேற்கொண்டு செல்லும் அந்த மாபெரும் சக்தியை இன்றளவும் மனித இனம் புரிந்து கொள்ள இயலவில்லை.
இத்தகைய இறைவனின் செயலாற்றலைப் புரிந்து கொள்வதில்தான் “சாதாரண மனிதன்” – ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் போன்ற இயற்கையின் ரகசியத்தினை அறிந்தவர்களின் அறிவாற்றலால் வேறுபடுகிறான்.
நமக்கு புரியாத செயலாற்றல் ஓர் உன்னத சக்தி “இறைசக்தி” என்பதை சுயமாக உணர்வதற்கு நீண்ட அனுபவங்களையும், காலங்கடந்தும் அவன் ஏற்றுக் கொள்கிறான்.
இந்திய கலாச்சாரம் என்பது உறுதியான, நம்பிக்கையுடன் கூடிய இறைசக்தியோடு பின்னிப் பிணையப்பட்டு, பிரபஞ்சத்திலிருந்து பெறப்பட்டு, இப்புவியெங்கிலும் பரவச் செய்யும் மின்னணு, மின்காந்த ஆற்றலைப் பெரும் பொக்கிஷமாகக் கொண்டுள்ள கோவில்கள் நிறைந்துள்ளதால் – இந்த இந்திய மண் “உலகத்தின் இதயம்” என்று போற்றப்படுகிறது. ஓரிடத்தில் அந்தப் பொக்கிஷம் குறைந்தாலும், புதிய கோவில்களின் வாயிலாக அவைகள் பூர்த்தி செய்யப்படும்.
அவ்வகையிலேயே இந்தப் புனிதமான “ஸ்ரீ மகாபஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருக்கோவில்”, தென்னிந்தியாவில் தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகாமையில் பஞ்சபூதேஸ்வரம், வேதியரேந்தல் விலக்கில் அமையப்பெற்றுள்ளது.
ஈசனின் ஓர் அங்கமான சக்திதேவி – பிரபஞ்சத்தில் ஒரு பெரும் அவதாரம். அவளே இப்பிரபஞ்சத்தின் வெளிப்பாடு, இப்பிரபஞ்சத்தில் மாற்றங்கள் நிரந்தரமானது என்பதாலும், அவ்வப்போது புதுப்புது நிகழ்வுகள் நிரந்தரமானது என்பதாலும், அவளுடைய திருநாமங்களும் மாறிக்கொண்டே, புதுப்புது நாமங்களுடன் பரிணமிக்கிறாள். அவள் வேறுயாருமல்ல.... “ஸ்ரீ மகா பத்ரகாளி” – இப்போது “ஸ்ரீ மகா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி” என்று அழைக்கப்படுகிறாள். “பத்ரம்” என்பதன் பொருள் “மங்களம்”, “காளி” என்பது “அள்ளிக் கொடுப்பவள்” என்பதாகும்.
மனித இனத்திற்கு செல்வங்களை வாரி வழங்கி, வேதங்களில் – அதர்வண வேதத்தால் அதர்வண பத்ரகாளி என்றும் போற்றப்படும் அவளே.... அவ்வேதத்தின் மூலம், இயற்கையின் புறத்தாக்குதல்களிலிருந்து நம்மைக் காக்க வல்லவள், நம் மனத்திலுள்ள அழுக்கினைப் போக்கி, இந்த லோகத்தில் விஷ்வரூபிணியாகி, சாந்த சொரூபத்தில் நமைக் காத்து, கோபத்தை அழித்து, ஞானத்தை ஊட்டி, பேரானந்தத்தை அளித்து, முக்தி (அருள், பொருள், செல்வம், நலம், வளம், ஆகியவற்றில் உயர்ந்த நிலை) அளிக்க வல்லவள்.
இவளே... ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ மகாசரஸ்வதி, ஸ்ரீ பராசக்தி, அவள் வழிபட்ட, வழித்தோன்றல் – ஸ்ரீ மகா பைரவர் பஞ்சபூதத்தின் சாராம்சம், உருவம், அருவம், அருவமற்ற உருவம் அந்த அடிப்படையில் இவள் – “ஸ்ரீ மகாபஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி” என்றழைக்கப்படுகிறாள். இந்த பஞ்சபூதேஸ்வர தர்மஷேத்திரத்தில் அவளுடைய தரிசனம் என்பது உள்ளேயும், வெளியேயும், எண்ணிலடங்கா அதிர்வலைகளை, கற்பனைக்கெட்டாத – நினைத்துப் பார்க்க இயலாத – பிரணவ (அ) சக்தி... – அது ஒருவருடைய ஆன்மாவைக் சுத்திகரிக்கும் – ஆத்ம பூர்த்திக்கு வழிவகுக்கும்.
இந்தியக் கலாச்சாரத்திற்குப் பெருமை சேர்க்கும் இதிகாசமாகிய ஸ்ரீமத் ராமாயணத்தின் பிரதானமானவரும், ஸ்ரீமன் நாராயணின் அவதார புருஷருமாகிய ஸ்ரீராமபிரான் – இராவணனோடு போரிடும் பொருட்டு, தனது சேனைகளோடு பஞ்சபூதேஸ்வரத்தில் (வடக்கிலிருந்து தென்னிந்தியாவிற்கு இலங்கை செல்லும் முன்பு) விஜயம் செய்யும் பொழுது அகஸ்திய மாமுனிவரும் – லோபமுத்திரையும் – இராவணளை வெல்ல “ஆதித்திய ஹ்ருதயம்” உபதேசம் செய்வித்தனர் (இந்த செய்தி கௌசிக நாடி மூலம் உறுதி செய்யப்படுள்ளது), அப்போது ஸ்ரீராமபிரான் சக்தி புஜை நடத்தியுள்ளார் அந்த சக்தி வேறுயாருமல்ல, “ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி” தான்.
தேவை என்கிறபொழுது, சரியான வழிபாட்டு ஸ்தலம் மிகவும் அவசியமாகிறது. இந்த கலியுகத்தில் இறைவன் -இறைவியின் திருநாமத்தை சொல்லும்போதே... மோட்சம் கிட்டும். இந்தப் பூமியில் அந்தந்த இடம் சார்ந்த இறைவன்-இறைவியின் திருநாமத்தை செப்புகையில், எண்ணிலடங்கா – ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள், தபஸ்விகள் ஆசீர்வாதத்தைப் பெறுகிறோம் என்பது நிதர்சனம், “ஆங்கிரஸ், ப்ரத்யங்கிரஸ்” ஆகிய முனிவர்களால் அம்பாளின் மூலமந்திரம் சக்தி தரிசனம் செய்யப்பட்டதால் அந்த இறைவியே “ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி” என்று போற்றப்படுகிறாள்.