"அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்" என்ற உயர்ந்த நோக்கில் 2002-ம் ஆண்டு வேதியரேந்தல் விலக்கு, மானாமதுரையை தலைமையிடமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்மஷேத்ரா அறக்கட்டளை எந்த வித பேதமும் இன்றி பொது நலம் ஒன்றையே தலையாக குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் விருப்பு வெறுப்பின்றி ஒற்றுமையுடன் சேர்ந்து வழிபாடு செய்வதற்கு வேண்டி ஸ்ரீ பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு ஆலயம் அமைத்து அதை நிர்வாகித்தும் வருகிறது. அறக்கட்டளையின் தலைவர்களாக சுவாமிஜி, மாதாஜி மற்றும் திருமதி. எஸ்.மீனாட்சி ஆகியோர் உள்ளனர்.
அறக்கட்டளை முறையாக இந்திய அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதற்கு வரும் நன்கொடைகள் அனைத்தும் வருமானவரிச் சட்டம் மற்றும் அயல் நாட்டு நன்கொடை பெறுதல் (முறைப்படுத்துதல்) சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டு கவனமாகவும் சீரிய முறையிலும் கையாளப்பட்டு சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
ஸ்ரீ பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஆலயத்தில் தினமும் அன்னதர்மம் செய்தல்
சித்தர் பீடங்கள், முக்கிய ஷேத்திரங்களில் விசேஷ காலங்களில் அன்னதர்மம் செய்தல்