Established and Maintained by Sri Maha Panchamukha Prathyangira Veda Dharmakshetra Trust
Sri Maha Panchamukha Prathyangira Devi Temple
Sri Maha Panchamukha Prathyangira Devi Temple
Lopa Muthirai - Sri Maha Panchamukha Prathyangira Devi Temple

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோயில்

Temple Hours:

Monday – Friday: 9:30am – 12:30pm | 5:30pm – 8:30pm

Saturday – Sunday: 9:00am – 8:30pm

Daily Aarti:

12:00pm and 7:30pm

Established and Maintained by
Sri Maha Panchamukha Prathyangira Veda Dharmakshetra Trust Sri Maha Panchamukha Prathyangira Veda Dharmakshetra Trust

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி வரவேற்கிறோம்

பஞ்சபூதேஸ்வரம் , மானாமதுரை , சிவகங்கை டிஸ்ட்ரிக்ட் ஆப் தமிழ்நாடு

எங்கள் கோயில் ஒரு வரலாறு

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி

ஒரு மாபெரும் சக்தி எங்கும் வியாபித்து, சர்வ வல்லமையாய், ஒன்று பலவாகி, பலவும் ஒன்றாகி, எங்கும் எல்லாவற்றிலும் ஊடுருவி, உள்ளும், வெளியும், கால-இடைவெளிகளையும் தாண்டி, இந்தப் பூமியிலும், பிரபஞ்ச அண்டத்திலும் பரவியுள்ளது. புல் பூண்டிலிருந்து.... மனித இனம் வரை, ஓரறிவு படைத்த இனங்களிலிருந்து.... ஆறறிவு படைத்த இனம் வரை அவைகளின் அறிவாற்றல், இவைகள் அனைத்தின் பிரபஞ்சத்தில் தோற்றத்தின் மூலம் – அந்த தெய்வீக சக்தியேயன்றி மனிதனின் முயற்சியல்ல.....!!

மேற்படியாக்கம், தொடர்காரணி, கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், சுற்றுதல், விரும்பியவைகளை நிறைவேற்றுதல், வேண்டாதவற்றை அழித்தல், நிலையற்றதிலிருந்து நிலையானதாகவும், நிலையானதிலிருந்து நிலையற்றதாகவும், சுயமாக மேற்கொண்டு செல்லும் அந்த மாபெரும் சக்தியை இன்றளவும் மனித இனம் புரிந்து கொள்ள இயலவில்லை.

இத்தகைய இறைவனின் செயலாற்றலைப் புரிந்து கொள்வதில்தான் “சாதாரண மனிதன்” – ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் போன்ற இயற்கையின் ரகசியத்தினை அறிந்தவர்களின் அறிவாற்றலால் வேறுபடுகிறான்.

நமக்கு புரியாத செயலாற்றல் ஓர் உன்னத சக்தி “இறைசக்தி” என்பதை சுயமாக உணர்வதற்கு நீண்ட அனுபவங்களையும், காலங்கடந்தும் அவன் ஏற்றுக் கொள்கிறான்.

இந்திய கலாச்சாரம் என்பது உறுதியான, நம்பிக்கையுடன் கூடிய இறைசக்தியோடு பின்னிப் பிணையப்பட்டு, பிரபஞ்சத்திலிருந்து பெறப்பட்டு, இப்புவியெங்கிலும் பரவச் செய்யும் மின்னணு, மின்காந்த ஆற்றலைப் பெரும் பொக்கிஷமாகக் கொண்டுள்ள கோவில்கள் நிறைந்துள்ளதால் – இந்த இந்திய மண் “உலகத்தின் இதயம்” என்று போற்றப்படுகிறது. ஓரிடத்தில் அந்தப் பொக்கிஷம் குறைந்தாலும், புதிய கோவில்களின் வாயிலாக அவைகள் பூர்த்தி செய்யப்படும்.

மேலும் படிக்க
About - Sri Mahaa Panchamukha Prathyangiraa Devi

கோயில் தொகுப்பு

புகைப்பட ஆல்பம்

"Fear not what is not real, never was and never will be.
What is real, always was and cannot be destroyed."

Bhagavad Gita

SAAKTHAMS

சாக்தம்ஸ்

தொழில்நுட்ப திட்டம்

சாக்தம்ஸ் என்பதன் பொருள் சக்தி என்பதாம்.

நமது பிரபஞ்சத்தில் இரண்டு நிலைகள் உண்டு. ஒன்று அசைவற்று நிலையாக நின்று கடமைகளை மட்டும் செய்தல் உதாரணம் சூரியன், சந்திரன், ஏனையகிரகங்கள். மற்றொன்று அனைத்து கிரகங்களின்றும் கிடைக்கின்ற சக்திகளை செயல்பாடு கொண்டு உருவாக்குதல் – இது சாக்தம் வகையாம். உதாரணம் மரங்கள், செடிகள், மலைகள்.

கடவுளுடைய சிருஷ்டியாக புல் பூண்டிலிருந்து ஆறறிவு படைத்த மனித இனம் வரை இந்த சக்தியின் செயல்பாடு தெரியவரும். வாழையடி வாழையாக மனித இனத்தின் அறிவாற்றல் முன்னேற்றம் கண்டு வருகிறது. அதுவே மனித இனத்தின் முன்னேற்றத்திற்கும், சுய முன்னேற்றம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாகிறது.

வேதங்களில் கூறியுள்ளபடி – உண்மையான அறிவு என்பது தகுந்த தகவல் பரிமாற்றம் மூலம் சாத்தியமாகும் என்பதன் அடிப்படையில், பஞ்சபூதங்களின் ஆளுமைக்குட்பட்ட நமது ஆலயத்தில் ஓர் அங்கமாக - சாக்தம்ஸ் ரிசர்ச் மற்றும் எஜுகேசன் என்ற அமைப்பின் வாயிலாக, ஒரு காலத்தில் முன்னேற்றமில்லாத மாவட்டங்கள் என்று கருதி, வானம் பார்த்த பூமி என்று வருணிக்கப்பட்ட சிவகங்கை – இராமநாதபுரம் மாவட்டத்தில் பல மனிதகுல முன்னேற்ற சேவைகளை கருத்தில் கொண்டு – விஞ்ஞான ரீதியான அணுகுமுறைகளை முன்நிறுத்தி – அது சார்ந்த ஆராய்ச்சிப் பணிகளை – ஆக்கபூர்வமான நிகழ்வுகளாக நிகழ்த்தும் பொருட்டும் அமைக்கப்படவுள்ளது. சாக்தம்ஸ் என்பதன் விரிவாக்கம் ஸ்ரீ ஆனந்தவல்லி அகாடமி ஃபார் நாலேஜ், ட்ருத், ஹெல்த், அக்ரிகல்ச்சர் அண்ட் மேனேஜ்மென்ட் சயின்ஸஸ்.

தெய்வீகமும் – விஞ்ஞானமும் இரண்டு கண்கள் போல பாவித்து மக்கள் வளர்ச்சியுற்று உலகமும் – பூமியும் – பிரபஞ்சமும் சமச்சீர் அடைந்து, மீண்டும் நமது தெய்வீக உலகம் – சத்யுகம் செல்ல நமக்குநாமே தயார் ஆக – நமது தாய் ஸ்ரீ மகாபஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி சாக்தம்ஸ் மூலம் விஞ்ஞானப்பூர்வமான விஷயங்களையும் ஒருங்கிணைத்து நம்மை காத்து அன்புடன் அரவணைக்கிறாள்.

மேலும் படிக்க