“சந்திரனின் கதிர்வீச்சு பௌர்ணமி அன்று எவ்வித தாக்கமும், தடையுமின்றி நேரிடையாக சூரிய சக்தியுடன் இணைந்து மிகுந்த பலன்களை மனித குலத்திற்கு அளிக்கும்”. “ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும், பெண்கள் ஒன்றுகூடி, ஸ்ரீமாதாஜி வழிநடத்த, குத்துவிளக்கு பூஜை நடைபெறுகின்றது”. இந்த பூஜையில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு நெறிமுறையோடு கூடிய சிறப்பான வாழ்வும், வாழ்வில் உயர்வும், ஆசைகள் நிறைவேறியும், ஆத்ம திருப்தியும் கிட்டும் என்பது அனுபவமான உண்மை.
“அறிகுறிகளுக்கு மருந்து கொடுத்துக் கொண்டே அடிப்படையுடன் போராடி, தெய்வீகமயமாக்கும் பூஜைதான் பௌர்ணமி பூஜை, இது சாக்தம் சார்ந்த முறையின் சிறப்பம்சமாகும்”.
குறைந்த பட்சம் மூன்று முறை விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவது என்பது அனுபவ உண்மை, “விளக்கு பூஜையில் பங்கு பெறும் மகளிர்களின் உள்ளொளியும், புறவொளியும் புதுப்பிக்கப்பட்டு, பிரச்சனைகளுக்கு தீர்வுகண்டு தன்னைத்தானறிந்து, ஒரு காலகட்டத்தில் உள்ளொளி தரிசனம் காண வழிவகுக்கும்”.
ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் ஸ்ரீ மகாபஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி பிரகாசமான வெற்றித் திருப்புமுனையின் தத்துவங்களை மக்களுக்கு உணர்த்தி, முன்னேற்றம் செய்து வருகிறாள் என்பது நிதர்சனம்.